Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியை விட யாரும் தரக்குறைவாக பேசிவிட முடியாது: கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி..!

Mahendran
சனி, 20 ஜனவரி 2024 (14:05 IST)
அண்மையில் பாஜக தலைவர்  திரு. அண்ணாமலை ஒரு மாநிலத்தின் அமைச்சர் குறித்தும், மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்தும் தரம் தாழ்ந்த வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தொடர்ந்து இவ்வாறு ஒருவர் பேசிவருவது அரசியலின் தரத்தையே தாழ்த்துகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என அண்ணாமலையின் பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து கனிமொழி எம்பி தனது சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் கன்மொழியின் கண்டன பதிவுக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
ஆண்டாண்டு காலமாக, தரம் தாழ்ந்த மொழியில் மட்டுமே பேசிப் பழகிய திமுகவினருக்கு, எங்கள் பகுதியின் வழக்கு மொழி தவறாகத் தெரிவதில் வியப்பில்லை. உங்கள் தந்தை, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதற்கொண்டு திமுக தெருமுனைப் பேச்சாளர்கள் வரை பேசும்  தரக்குறைவான பேச்சை விட எந்தக் காலத்திலும், யாரும், யாரையும் தரக்குறைவாகப் பேசிவிட முடியாது. 
 
அப்படி ஒரு கட்சியில் இருந்து கொண்டு, தரக்குறைவான பேச்சு பற்றி அறிவுரை கூறும் தகுதி உங்களுக்கு இல்லை. எந்தவிதத் தகுதியும் அற்றவர்களுக்கு, வெற்று விளம்பரம் மூலம் ஒரு பிம்பம் கட்டமைக்க முயல்பவர்களை, பொதுச் சமூகம் இப்படித்தான் எதிர்கொள்ளும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வது நலம்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

கட்சி, கொள்கைகள் கடந்து காட்டும் அன்பு: விஜய்க்கு நன்றி சொன்ன தமிழிசை செளந்திரராஜன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments