Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாராக இருந்தாலும் நடவடிக்கை: திருவள்ளூர் மாணவிக்கும் குரல் கொடுத்த அண்ணாமலை!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (15:10 IST)
தஞ்சை மாணவி தற்கொலைக்கு குரல் கொடுத்த அண்ணாமலை திருவள்ளூர் மாணவி தற்கொலைக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என யூடியூப் சேனலை ஆரம்பித்து தங்களைத் தாங்களே கேள்வி எழுப்பிக் கொண்ட சிலரது கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் திருவள்ளூர் மாணவிக்கும் தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை குரல் கொடுத்துள்ளார் 
 
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றில் முனுசாமி என்பவர் அருள்வாக்கு கூறிய நிலையில் அவரிடம் மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவி பேய் பிசாசு பிடிக்கப்பட்டதாக அனுமதிக்கப்பட்டார். அந்தப் பெண்ணுக்கு பூஜை செய்து வந்த நிலையில் திடீரென அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது
 
 இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சாமியார் முனுசாமி தனது மனைவியுடன் தலைமறைவாகியுள்ளார். இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது: 
 
மிகுந்த வேதனைக்குள்ளாகிற கடும் கண்டனத்துக்குறியைச் சம்பவம் இது.  குற்றம் செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் அவர்களின் சமூக விரோத கட்டமைப்பின் மீதும் எந்த தயவு தாட்சனையின்றி காவல்துறை கடுமையான நடவடிக்கையைத் துரிதமாக எடுக்க வேண்டும். 
 
 தஞ்சை மாணவிக்கு மட்டுமின்றி திருவள்ளூர் மாணவிக்கும் குரல் கொடுத்ததை அடுத்து அண்ணாமலை விமர்சனம் செய்தவர்கள் தற்போது கப்சிப் ஆகி உள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments