Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் இருந்து கொண்டே அமைச்சர்களை இயக்குகிறார் செந்தில் பாலாஜி: அண்ணாமலை

Siva
திங்கள், 8 ஏப்ரல் 2024 (13:30 IST)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து கொண்டே அமைச்சர்களை இயக்குகிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் காட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட திமுக அமைச்சர்களுக்கு சிறையில் இருந்தே கதை திரைக்கதை வசனம் எழுதிக் கொடுப்பது செந்தில் பாலாஜி தான் என்றும் சிறையில் இருந்து தினமும் அவர் செல்போனில் பேசி அமைச்சர்களிடம் ஐடியா கொடுக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்

ஆனால் இந்த முறை திமுக தங்க சுரங்கத்தையே கோவையில் கொட்டினாலும் பாஜக தான் வெற்றி பெறும் என்றும் பதிவான வாக்குகளில் 60% வாக்குகள் எனக்கு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சதி வலையில் பின்னப்பட்டுள்ளது என்றும், சதியின் காரணமாக அவரது பெயர் சொல்லப்பட்டுள்ளது என்றும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்

மேலும் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தமிழக அரசை கேட்டுக் கொண்டார்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி சிறப்பு மலை சீசன் ரயில் இன்று முதல் தொடக்கம்..!

இனி 5 வயதில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாது: வயது வரம்பை உயர்த்தி உத்தரவு..!

பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?

தவெக பொதுக்குழுவில் அறுசுவை உணவு.. 21 வகையான மெனு விவரங்கள்..!

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments