Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித்ஷா வருகிறார் என்ற செய்தியால் முதலமைச்சருக்கு காய்ச்சல் வந்துவிட்டது: அண்ணாமலை..

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (11:57 IST)
அமித்ஷா வரும்போது லைட்டை வேண்டுமானால் ஆப் செய்யலாம் ஆனால் தொண்டர்களின் உணர்வை ஆப் செய்ய முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
நேற்று வேலூரில் நடைபெற்ற அமித்ஷா கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை ’இந்த கூட்டத்தை பார்த்து நம்முடைய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நேற்றிலிருந்து காய்ச்சல் ஜுரம் வர ஆரம்பித்துவிட்டது. 
 
தமிழக மண்ணிற்கு அவர் அமித்ஷாஜி வந்துவிட்டார் என்று தெரிந்தவுடன் சேலத்தில் காய்ச்சல் தொடங்கி விட்டது. ஒன்பது வருஷங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள் என முதலமைச்சர் கேட்டார், அதை சொல்வதற்காக தான் இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது 
 
அமித்ஷா வரும்போது லைட்டை வேண்டுமென்றால் ஆப் பண்ணலாம் தொண்டர்களுடைய உற்சாகத்தை எப்போதும் உங்களால் ஆப் செய்ய முடியாது. 2024 பாராளுமன்றத்தில் தேர்தலில் தமிழகத்தில் நம்முடைய கூட்டணி 25 எம்பிக்களை குறைந்தபட்சம் புதிய பாராளுமன்றத்தில் அமர வைப்போம் என்று அண்ணாமலை தெரிவித்தார்
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் இருந்து தப்பிக்கிறது மதுரை.. ரூ.15 கோடி செலவில் கான்கீரிட் கால்வாய்..!

ராஜ்யசபா தொகுதி இல்லை என கைவிரித்த ஈபிஎஸ்.. சத்தியம் வெல்லும் என பிரேமலதா பதிவு..!

மந்திரவாதி சொன்ன மூடநம்பிக்கை.. பச்சிளங்குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த பெற்றோர்..!

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே தங்கும் அறை.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!

தந்தையை கோடாரியால் வெட்டிய மகன்.. தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments