Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐசியு-வில் கிடக்கும் காங்... ராகுல் பேச்சுக்கு அண்ணாமலை பதிலடி!

Advertiesment
ஐசியு-வில் கிடக்கும் காங்... ராகுல் பேச்சுக்கு அண்ணாமலை பதிலடி!
, வியாழன், 3 பிப்ரவரி 2022 (08:16 IST)
தமிழகத்தை ஒரு போதும் பாஜக ஆட்சி செய்ய முடியாது என்ற ராகுல் காந்தியின் பேச்சு பொருத்தமற்றது என அண்ணாமலை சாடல். 

 
தமிழகத்தில் தாமரை மலராது என திமுக உள்பட பல்வேறு கட்சிகள் தெரிவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஆனாலும் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 4 எம்எல்ஏக்கள் பாஜகவினர் வென்று உள்ளனர் என்பதும் படிப்படியாக பாஜகவினர் எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சியாக வர வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நேற்று மக்களவையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆம், பாஜக தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது என்றும் உங்களால் அதை சாதிக்கவே முடியாது என்றும் ஆவேசமாக தெரிவித்தார். 
webdunia
தனது உரையின் போது தமிழ்நாடு குறித்து அதிக முறை பேசியது ஏன் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, நான் ஒரு தமிழன் என ராகுல் பதில் அளித்து நகர்ந்தார். இதனிடையே இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை. அவர் கூறியதாவது, 
 
தமிழகத்தை ஒரு போதும் பாஜக ஆட்சி செய்ய முடியாது என்ற ராகுல் காந்தியின் பேச்சு பொருத்தமற்றது. தமிழக மக்கள் பாஜக மற்றும் பிரதமர் மோடியுடன் இருக்கின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சியோ திமுவின் ஆக்சிஜன் உதவியுடன் ஐசியு-வில் இருக்கிறது என விமர்சித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அன்றும்.. இன்றும்.. மாறாத விலையில் பெட்ரோல் & டீசல்!