Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 2 March 2025
webdunia

கவர்னரை அடுத்து காவி வள்ளுவர்புகைப்படத்தை பதிவு செய்த அண்ணாமலை..!

Advertiesment
கவர்னரை அடுத்து காவி வள்ளுவர்புகைப்படத்தை பதிவு செய்த அண்ணாமலை..!

Siva

, செவ்வாய், 16 ஜனவரி 2024 (11:55 IST)
கவர்னர் ஆர்.என்.ரவி காவி உடை அணிந்த வள்ளுவர் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து திருவள்ளுவர் வாழ்த்து கூறிய நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தனது சமூக வலைதளத்தில் காவி வள்ளுவர் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் இந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது
 
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப, உலகம் முழுவதும் எக்காலத்துக்கும் பொருந்தும்படியான திருக்குறளை வழங்கிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
 
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு  நரேந்திரமோடி அவர்களின் சீரிய முயற்சியால், திருக்குறள் இன்று உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகப் பொதுமறை என்ற பெயருக்கு ஏற்ப புகழ் பெற்று திகழ்கிறது. உலக நாடுகளில் திருவள்ளுவரின் பெருமை பரவி வருகிறது.
 
பாரதத்தின் கலாச்சாரமும், பாரம்பரியமும், மனித குலத்தின் வாழ்வியல் முறைகளும் நிறைந்திருக்கும் திருக்குறளை உணர்ந்து படிப்போம். அய்யன் திருவள்ளுவரைப் போற்றுவோம்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணாமலை கைய புடிச்சி நாங்களா தடுக்குறோம்.. ஆதாரம் இருந்தா வெளியிடட்டும்! – அமைச்சர் துரைமுருகன்!