அண்ணாமலை பப்ளிசிட்டிக்காக பண்ணியிருப்பார்.. மாணவி வன்கொடுமையில் சிபிஐ விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ்!

Prasanth Karthick
சனி, 28 டிசம்பர் 2024 (10:41 IST)

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டது கவனத்தை ஈர்ப்பதற்காக என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

 

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தை கண்டித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். இந்த செயல் குறித்து பலர் ஆதரவாக பேசி வரும் நிலையில், பலர் கேலியும் செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் “அவர் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், ஊடகங்களில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இதுபோன்ற ஸ்டண்ட்களில் ஈடுபடுகிறார் என்றே நான் கருதுகிறேன்” என கூறியுள்ளார்.

 

மேலும் “அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான நபர் அல்லாது வேறு ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக கூறுகிறார்கள். அந்த நபர் யார் என்பதை கண்டறிய வேண்டும். காவல்துறை விசாரித்தால் எதுவும் சரியாக இருக்காது. சிபிஐ விசாரித்தால்தான் தெளிவான தகவல்கள் தெரிய வரும்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments