எங்கள் வீட்டின் கதவு திறந்தே உள்ளது. அதிமுகவுக்கு அண்ணாமலை மறைமுக அழைப்பா?

Mahendran
வெள்ளி, 12 ஜனவரி 2024 (17:09 IST)
மோடி அனைவரையும் வரவேற்பார் என்று அண்ணாமலை பேசியிருப்பது அதிமுகவுக்கு மறைமுக அழைப்பாக கருதப்படுகிறது.  

பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறுவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 2024 தேர்தலில் மட்டும் இன்றி 2026 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என சமீபத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.

ஆனால் அதே நேரத்தில் தற்போது அவர் திடீரென ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்வேன் என்றும் தெரிவித்தது பாஜகவுடன் மீண்டும் அதிமுக நெருங்குகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இந்த நிலையில் அண்ணாமலை இன்று  பேசிய போது ’நாம் வீடு கட்டி உள்ளோம், அது என் டி ஏ என்ற கூட்டணி வீடு. சிலர் உணவு அருந்தி விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்று விடுவார்கள், வெளியே சென்றவுடன் நாங்கள் வீட்டினர் இல்லை என்று கூறுவார்கள். அவர்கள் என்ன சொன்னாலும் பலம் நமது பக்கம் தான். எனினும் அவர்களுக்காக நமது வீட்டின் கதவு திறந்தே உள்ளதும் மோடி அனைவரையும் வரவேற்பார் என்று கூறியுள்ளார்.

இது அதிமுகவுக்கான மறைமுக அழைப்பு என்ற கருதப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments