சிவாஜியைவிட மிகப்பெரிய நடிகர் அண்ணாமலை - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (16:50 IST)
காங்கிரஸ் மூத்த தலைவரும்,  ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ‘’அண்ணாமலை சிறந்த நடிகர்’’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை உள்ளார். அடுத்த ஆண்டு நடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் அண்ணாமலை தீவிரமாக இறங்கியுள்ளார்.

சமீபத்தில் கட்சி விரோத  நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில் தமிழகத்தில் ஊழலை எதிர்த்து அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து, காங்., எம்.எல்.ஏ.ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அவர்,’’அண்ணாமலையின் நடைப்பயணமா, பஸ் பயணமா? நடைப்பயணம் என்று எனக்குத் தெரியவில்லை. அண்ணாமலையைப் பொறுத்த வரையில் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர் மிகப்பெரிய நடிகர்.  எங்கள் ஆருயிர் அண்ணன் சிவாஜி அவர்களை விட அண்ணாமலை சிறந்த நடிகர் தான். பாதயாத்திரை போனால் தானும் ராகுல் காந்தி ஆகலாம் என்று அண்ணாமலை  நினைக்கிறார். அவர் ராகுல் காந்தியாக முடியாது. அவர் பாதயாத்திரை போகின்றவரையில் அவர் தமிழக பாஜகவின் தலைவராக இருப்பாரா என்பது சந்தேகம் ‘’என்று கூறினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments