Publish Date: Thu, 09 Jun 2022 (14:09 IST)
Updated Date: Thu, 09 Jun 2022 (14:11 IST)
ஏற்கனவே இரண்டு அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் குறித்த ஆதாரங்களை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டாவது ஊழல் பட்டியல் அதைவிட பத்து மடங்கு இருக்கும் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஒரு ஆண்டாக தமிழகத்தை ஆட்சி செய்து வரும் திமுகவுக்கு, அதிமுக உள்பட எந்த எதிர்க்கட்சியும் பெரியதாக பிரச்சனை செய்யாமல் இருக்கும் நிலையில் பாஜக மட்டுமே அவ்வப்போது குடைச்சல் கொடுத்து வருகிறது
குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளும் அமைச்சர்களின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக அவர் கூறும் ஊழல் குற்றச்சாட்டு முதல்வரின் குடும்பத்தின் மீது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் இரண்டு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்த அண்ணாமலை அடுத்ததாக வரும் அமைச்சர்களின் பட்டியல் 10 மடங்காக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.