Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறைக்கு, பொறுப்பு டிஜிபி நியமனம் என்பது அதிகார துஷ்பிரயோகம்: அண்ணாமலை கண்டனம்..

Siva
ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2025 (15:57 IST)
மாண்புமிகு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக, தமிழகக் காவல்துறைக்கு, பொறுப்பு டிஜிபி நியமனம் செய்திருக்கிறது திமுக அரசு. இது அதிகார துஷ்பிரயோகம் என அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
மாநிலக் காவல்துறை தலைவர் நியமனம் தொடர்பாக, மாண்புமிகு உச்சநீதிமன்றம், மிகவும் தெளிவான விதிமுறைகளை வகுத்துள்ளது. டிஜிபி பொறுப்பில் இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதம் முன்பாகவே, அடுத்த டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறது. திரு. சங்கர் ஜிவால் அவர்களைக் காவல்துறை தலைவராக நியமிக்கும்போதே, அவர் ஓய்வு பெறும் தினமும் தமிழக அரசுக்கும் தெரியும். 
 
ஆனால், தமிழகத்தில் அத்தனை உயர் அதிகாரிகள் பதவியையும், அரசியல் பதவியாக்கி வைத்திருக்கிறது திமுக அரசு. ஒரு சில காவல்துறை உயர் அதிகாரிகள், திமுக வட்டச் செயலாளர்களைப் போல பேசுவதையும் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
இந்த நிலையில், அடுத்த காவல்துறை டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் 6 பேர் இருக்க, பொறுப்பு டிஜிபி நியமனம் மூலம், அவர்கள் பதவி உயர்வைத் தட்டிப் பறித்திருப்பதோடு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் புறக்கணித்திருக்கிறது திமுக.
 
காவல்துறை அதிகாரிகளை, தங்கள் அரசியலுக்குப் பலிகடாவாக்கும் திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை, வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்கள் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது என்பதையும், நினைவுபடுத்திக் கொள்கிறேன்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்தை விசாரிக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம்.. மத்திய அரசின் அழுத்தமா?

சென்னையில் தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு சவரன் விலை ரூ.88,000ஐ நெருங்கியது..!

ராகுல் காந்தி தான் ராமர்.. அமலாக்கத்துறை ராவணன்.. காங்கிரஸ் வெளியிட்ட கேலிச்சித்திரத்தால் சர்ச்சை..!

ஜோதி மல்ஹோத்ராவை அடுத்து இன்னும் இருவர் கைது. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா?

நேற்று போலவே இன்றும்.. காலையில் குறைந்து மாலையில் உயர்ந்தது தங்கம் விலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments