மூன்றாவது முறையாக பிரதமராக இன்று நரேந்திர மோடி பதவியேற்க இருக்கும் நிலையில் அவரை தொடர்ந்து 30 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு நான்கு அமைச்சர் பதவிகளும் பவன் கல்யாண் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகளும் நிதிஷ் குமார் கட்சிக்கு இரண்டு அமைச்சர்கள் பதவியும் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.
இந்த நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருக்கும் அண்ணாமலையும் மத்திய அமைச்சராக பதவி ஏற்க இருப்பதாகவும் டெல்லியில் இருக்கும் அவருக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
அண்ணாமலையுடன் சேர்த்து மொத்தம் 12 பாஜகவினர் இன்று மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அண்ணாமலை மத்திய அமைச்சரானால் தமிழக பாஜகவின் தலைவர் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அண்ணாமலைக்கு எந்த துறை வழங்கப்படும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.