Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சான்றிதழுக்கான 18% ஜிஎஸ்டி வரியை ரத்து செய்க - ஓபிஎஸ்

சான்றிதழுக்கான 18% ஜிஎஸ்டி வரியை ரத்து செய்க - ஓபிஎஸ்
, வியாழன், 25 நவம்பர் 2021 (14:05 IST)
எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓபிஎஸ் கல்வி சான்றிதழ் பெறும் போது 18% ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

 
அண்ணா பல்கலைகழகம் மற்றும் அதன் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி சான்றிதழ் பெறும் போது 18% ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என்ற செய்தி ஊடகங்களில் வெளியாகி மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓபிஎஸ் கல்வி சான்றிதழ் பெறும் போது 18% ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழக சான்றிதழுக்கான 18% ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். இந்த 18% வரி மாணவ, மாணவிகள், பெற்றோர் தலையில் விழாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார். 
 
இதனைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அண்ணா பல்கலைகழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரி மாணவர்கள் படிக்கும் போது எந்த சான்றிதழ் கேட்டாலும் அதற்கு ஜிஎஸ்டி வசூல் வசூலிக்கப்பட மாட்டாது. 
 
ஆனால் அதே நேரத்தில் படித்து முடித்து அவர்கள் வெளியே சென்ற பிறகு கேட்கும் சான்றிதழுக்கு மட்டுமே ஜிஎஸ்டி வசூல் செய்யப்படும் என்றும் இது வருடத்திற்கு சுமார் 20,000 பேர்கள் மட்டுமே இது போன்ற சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்கிறார்கள் என்றும் அவர்களிடம் மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்னைக்கு இல்ல ஆனா... காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்த தகவல்!