அரியர் பசங்களுக்கு பாஸ் போட முடியாது! – அரசுக்கு எதிராக வழக்கு

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (10:15 IST)
அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கும் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

கொரோனா காரணமாக தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் கலை அறிவியல், தொழில்நுட்ப படிப்புகள் மற்றும் பொறியியல் படித்து வரும் மாணவர்களில் இறுதியாண்டு மாணவர்களை தவிர மற்றவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. தொடர்ந்து அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கும் தேர்வின்றி தேர்ச்சி வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதை தொடர்ந்து முதல்வருக்கு நன்றி தெரிவித்து அரியர் மாணவர்கள் பலர் போஸ்டர் ஒட்டினர். இந்நிலையில் அண்ணா பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசின் உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார். “அனைத்து அரியர் மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்குவதால் கல்வி தரம் பாதிக்கும். மேலும் அனைத்து பாடங்களையும் படித்து நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுவர். எனவே தமிழக அரசின் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரியர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று விட்டதாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்த நிலையில் இந்த செய்தி அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்பனை: சென்னையில் 6 பேர் இளைஞர்கள் கைது..!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மையம்: இன்று 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை முன்னறிவிப்பு

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆவணங்கள் தேவையா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்..!

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

அடுத்த கட்டுரையில்
Show comments