Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீண்ட காலமாக அரியர் வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு தேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு..!

Advertiesment
அண்ணா பல்கலைக்கழகம்

Mahendran

, திங்கள், 12 மே 2025 (15:29 IST)
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் தொலைநிலைக் கல்வி மூலம் பொறியியல் படித்த மாணவர்கள், நீண்ட காலமாக அரியர் வைத்திருந்தால், இப்போது சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
அரியர் பாடங்கள் நீண்ட காலமாக இருப்பவர்கள், 2025 ஏப்ரல்-மே மற்றும் ஜூன்-ஜூலை மாதங்களில் நடைபெறும் சிறப்புத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த தேர்வுக்கு மாணவர்கள் http://coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் மே 17க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை பொருத்து தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்படும். மேலும், தேர்வு நடைபெறும் இடங்கள் மற்றும் நேரம் குறித்த விவரங்கள் மே 27க்குப் பிறகு அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
 
நீண்ட காலமாக அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, தங்களுடைய பட்டத்தைப் பெற தேவையான கடைசி முயற்சியாக இந்த தேர்வை எழுதலாம்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் உடனான சண்டை குறித்த முழு விவரங்களை பகிர முடியாது: ஏர் மார்ஷல் ஏகே பாரதி