Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேல யாரும் கை வைக்கக்கூடாது..! – அண்ணா, பெரியார் சிலைகளுக்கு காவலர் பாதுகாப்பு!

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (09:31 IST)
விழுப்புரம் மாவட்டத்தில் அண்ணா சிலை அவமரியாதை செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னையில் அண்ணா, பெரியார் சிலைகளுக்கு காவலர் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்கள் முன்னதாக திமுக எம்.பி ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இந்து மத அமைப்புகள் பல அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தன.

ALSO READ: தமிழக ஆளுனர் திடீர் டெல்லி பயணம்.. பெட்ரோல் வெடிகுண்டு சம்பவம் குறித்து ஆலோசனையா?

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வரும், திமுகவின் ஸ்தாபகருமான அறிஞர் அண்ணாவின் சிலையை திமுக கொடியால் தலையை மூடிய மர்ம ஆசாமிகள், செருப்பு மாலை அணிவித்து, ஆ.ராசாவின் படத்தையும் கருப்பு புள்ளி குத்தி மாட்டி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேசமயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கு காவலர் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வலுக்கும் ராமதாஸ் - அன்புமணி மோதல்! பேச்சுவார்த்தை நடத்த உடனே வர சொன்ன நீதிபதி!

மத்திய அரசு என்னும் மதயானையின் அங்குசம்? மாநிலக் கல்விக் கொள்கை வெளியிட்டார் முதல்வர்!

பெண்களின் அந்தரங்க தகவல்களை விற்ற Meta! உடன் சிக்கிய Google?

ரோந்து பணிகளுக்கு தனியாக செல்ல வேண்டாம்: காவல்துறையினர்களுக்கு அதிகாரிகள் உத்தரவு..!

இந்தியாவுடன் பல ஆண்டுகள் கட்டமைத்த உறவு பாதிப்படைய வாய்ப்பு; டிரம்ப்பை எச்சரிக்கும் அமெரிக்க செனட்டர்

அடுத்த கட்டுரையில்
Show comments