திமுகவைத் தோற்றுவித்தவரும் திமுகவின் முதல் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 113 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
திமுக என்ற கட்சியை உருவாக்கி அது இன்று 70 ஆண்டுகள் தாண்டியும் தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளில் ஒன்றாக இருக்க காரணகர்த்தாவாக அமைந்தவர் அண்ணாதுரை. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் மாணவர்களை ஒன்றுதிரட்டி இந்தியை தமிழ்நாட்டில் இருந்து விரட்டி ஆட்சிக்கு வந்தது திமுக. வந்த ஓரே ஆண்டில் சுயமரியாதை திருமண சட்டம், தமிழகத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியது எனப் பல அரிய திட்டங்களை செயல்படுத்திக் காட்டியவர்.
இந்நிலையில் இன்று அவரின் 113 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினரும், திராவிட உணர்வாளர்களும் அண்ணாவின் பிறந்தநாளை இணையதளத்தில் கொண்டாடி வருகின்றனர். #HBDANNA என்ற ஹேஷ்டேக்கையும் டிரண்ட் செய்து வருகின்றனர்.