பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசிய ஆ.ராசாவை திமுக பதவியிலிருந்து நீக்காதது ஏன் என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பிரச்சாரம் ஒன்றில் திமுக எம்.பி ஆ.ராசா முதல்வர் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக திமுகவினரே ஆ.ராசா செயலுக்கு அதிருப்தி தெரிவித்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பிரச்சாரத்தில் பேசிய பாமக மாநிலங்களவை எம்.பி அன்புமணி ராமதாஸ் “பெண்களையும், தாய்மார்களையும் ஆ.ராசா இழிவாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஆனால் இதுகுறித்து ஸ்டாலின் நேரடியாக கூட அவரை கண்டிக்கவில்லை. அவர்களுக்கு பெண்கள் குறித்த எந்த மதிப்பு மரியாதையும் கிடையாது. இதுவே பாமகவில் இப்படி ஒருவர் பேசி இருந்தால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்திலிருந்தும் நீக்குவதுடன், உதைத்து அனுப்பியிருப்போம்” என பேசியுள்ளார்.