Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாதங்களில் 3 முறை பால் விலை உயர்வு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (16:11 IST)
6 மாதங்களில் 3 முறை தனியார் பால் விலை உயர்ந்துள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: 
 
தமிழ்நாட்டில் இரு தனியார்  நிறுவனங்களின் பால் விலைகள் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளன. மற்ற தனியார் நிறுவனங்களின் பால் விலைகளும் அடுத்த சில நாட்களில் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த  6 மாதங்களில் செய்யப்பட்ட மூன்றாவது விலை உயர்வு ஆகும்!
 
தமிழ்நாட்டில் மூன்று வகையான ஆவின் பால்கள்  லிட்டர் முறையே ரூ.40, ரூ.44, ரூ.48 என்ற விலையில் விற்கப்படுகின்றன. இதே வகையான பால்களை தனியார் நிறுவனங்கள் ரூ.54 - 56,  ரூ.64-66, ரூ. 70-72 வரை விற்கின்றன. ஆவினை விட தனியார் பால் விலை 50% வரை அதிகம் ஆகும்!
 
தமிழ்நாட்டின் பால் சந்தையில் 84% தனியார் நிறுவனங்களிடம் இருப்பதால், இந்த விலை உயர்வால் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுவார்கள். 14 மாதங்களில் தனியார் பால் விலை 5 முறை உயர்த்தப்பட்டுள்ள போதிலும் அதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது!
 
பால் சந்தையில் ஆவினின் பங்கை 50% ஆக உயர்த்துவது; பால் விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அமைப்பது ஆகியவற்றின் மூலமாகத் தான் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு விலை உயர்விலிருந்து மக்களைக் காக்க வேண்டும்!
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!

ஆன்லைன் சூதாட்டத்தில் மேலும் ஒரு உயிரிழப்பு: எத்தனை உயிரிழப்புகளை அரசு வேடிக்கை பார்க்கும்?

ஐபிஎல் ஏலம்: வீரர்கள் தேர்வில் வித்தியாசம் காட்டிய சிஎஸ்கே - அணியை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய குறை!

லெபனான் உடன் போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புதல்..!

மகாராஷ்டிரா முதல்வராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்.. ஆளுநருடன் சந்திப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments