Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரபலி கொடுக்கப்பட்ட பெண்ணின் உடல் தமிழகம் வராதது ஏன்? அன்புமணி ராமதாஸ்

Webdunia
சனி, 15 அக்டோபர் 2022 (11:47 IST)
நரபலி கொடுக்கப்பட்ட பெண்ணின் உடல் தமிழகம் வராதது ஏன்? என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
கேரளத்தில் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி நரபலி கொடுக்கப்பட்ட தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணின் உடல் இதுவரை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை. தாயை இழந்த அவரது பிள்ளைகள் அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய முடியாததால் இரட்டை வேதனையில் தவிக்கின்றனர்
 
கோட்டயம் அரசு மருத்துவமனையில் பத்மா உடல் வைக்கப்பட்டுள்ளது. உறவு முறையை உறுதி செய்ய அவரது மகன்களிடம் மரபணு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், பிள்ளைகளிடம் உடல் ஒப்படைக்கப்படவில்லை. அதற்கான காரணத்தை தெரிவிக்க  கேரள அரசு மறுக்கிறது!
 
இறந்த முன்னோரின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்து கண்ணியமாக வழியனுப்பி வைப்பது தமிழர்களின் வழக்கம். அதை நிறைவேற்ற உதவும் வகையில் பத்மாவின் உடலை அவரது சொந்த ஊரான தருமபுரி மாவட்டம் எர்ரபட்டிக்கு கொண்டு வர தமிழக, கேரள அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments