பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் அதிரடி..!

Mahendran
வியாழன், 11 செப்டம்பர் 2025 (11:08 IST)
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு, பாமக தொண்டர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
"பாமகவில் உள்ள யாரும் அன்புமணி ராமதாஸுடன் எந்தவிதமான தொடர்புகளையும் வைத்துக்கொள்ளக்கூடாது. மீறினால், அவர்கள் மீதும் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 
அன்புமணி நீக்கத்திற்கான உண்மையான காரணம் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், கடந்த சில மாதங்களாக கட்சிக்குள் நிலவி வந்த உட்கட்சி பூசல்கள் மற்றும் தலைமைப்பொறுப்பு குறித்த கருத்து வேறுபாடுகளே இந்த முடிவுக்குக் காரணம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
அன்புமணியின் நீக்கம், பாமகவின் எதிர்கால அரசியல் பாதையை எவ்வாறு பாதிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

அடுத்த கட்டுரையில்
Show comments