Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இது மனிதநேயமற்ற அரக்கத்தனம்: சிங்களப்படைக்கு அன்புமணி கண்டனம்

Advertiesment
இது மனிதநேயமற்ற அரக்கத்தனம்: சிங்களப்படைக்கு அன்புமணி கண்டனம்
, வியாழன், 21 அக்டோபர் 2021 (22:36 IST)
இது மனிதநேயமற்ற அரக்கத்தனம் என சிங்களப்படைக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
வங்கக்கடலில் புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் மீனவர்களின் படகு மீது கப்பலை மோதிக் கவிழ்த்து ராஜ்கிரண் என்ற மீனவரைக் கொன்ற சிங்களப் படையினர், அவரது உடலையும் இலங்கைக்கு எடுத்துச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இது மனிதநேயமற்ற அரக்கத்தனம்
 
சிங்களப்படையால் கொண்டு செல்லப்பட்ட மீனவர் ராஜ்கிரணின் உடலை உடனடியாக அவரது சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு குறைந்தது  ரூ.1 கோடி இழப்பீடாக பெற்றுத் தர வேண்டும்
 
கேரளத்தையொட்டிய அரபிக்கடலில் தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றதற்காக இத்தாலிய கடற்படையினர் மீது எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவோ, அதை விடக் கடுமையான நடவடிக்கைகளை சிங்களக் கடற்படையினருக்கு எதிராக அரசு மேற்கொள்ள வேண்டும்!
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மன்னிப்பு கேட்பீர்களா திருமாவளவன்? பாஜக நாராயணன் திருப்பதி கேள்வி