Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக செய்ய பயந்தது, நாங்க செய்கிறோம் - அன்பில் மகேஷ்

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (11:42 IST)
கடந்த கால ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக பயந்தது. ஆனால் நாங்கள் செய்துள்ளோம் என அன்பில் மகேஷ் பேச்சு. 

 
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர்  9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6 மற்றும் 9 களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 12 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே முழு ரிசல்ட் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனிடையே விழுப்புரத்திற்கு பிரச்சாரத்திற்கு சென்ற அன்பில் மகேஷ், தேர்தலின் போது கொடுத்த 500 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். பெண்களுக்கு பேருந்தில் இலவசம் என்று அறிவித்ததோடு அந்த அறிவிப்பை முதல்வர் உடனடியாக நிறைவேற்றி வைத்தார் என தெரிவித்தார். 
 
அதோடு திமுக அரசாங்கம் அமைய காரணமாக இருந்த மக்களின் தேவை அறிந்து திட்டங்களை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார். எனவே மக்களின் பிரச்சனையை அறியவே நேரில் வந்து கொண்டிருக்கிறோம். இனியும் வருவோம். கடந்த கால ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக பயந்தது. ஆனால் நாங்கள் செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments