Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதெல்லாம் நல்லதுக்கு இல்லை: காங்கிரஸை எச்சரித்த திமுக!

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2020 (19:08 IST)
நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கூட்டணியியிலும் சலசலப்பு ஏற்பட்டது என்பது தெரிந்ததே. போதுமான இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவில்லை என இரு தரப்பிலும் இருந்து கூட்டணி கட்சிகள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும் பெரும் அதிருப்தி அடைந்தன என்று கூறப்பட்டது
 
இந்த நிலையில் ஊராட்சி தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு எதிராக இருந்ததாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் சற்று முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த அறிக்கையால் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் விரிசல் ஏற்படுமோ என்று என்ற கருத்து நிலவியது 
 
இதனை அடுத்து கே.எஸ்.அழகிரியின் அறிக்கை குறித்து திமுக பிரமுகர் ஜெ அன்பழகன் கூறியதாவது: கே.எஸ்.அழகிரியின் வெளிப்படையான அறிக்கை நல்லதல்ல என்றும், எதைவைத்து அழகிரி அவர்கள் இவ்வாறு ஒரு அறிக்கையை வெளியிட்டார் என தெரியவில்லை என்றும், அவர் கூறியுள்ளார். ஜெ. அன்பழகனின் இந்த கருத்தால் திமுக காங்கிரஸ் கட்சி இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலகமூட்டி குளிர்காய நினைக்கிறாங்க.. காமராஜர் சர்ச்சை! - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

மாம்பழ லாரி கவிழ்ந்து விபத்து.. மூட்டை மூட்டையாய் அள்ளி சென்ற பொதுமக்கள்..!

லிவ் இன் காதலியை விபச்சாரத்திற்கு தள்ள முயன்ற காதலன்.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

காசு கொடுத்தால் மனைவியுடன் உல்லாசம்.. தட்டி கேட்க வந்த போலீஸும்..? - பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

17 நீதிபதிகளை டிஸ்மிஸ் செய்த டிரம்ப்.. அறிவுகெட்ட செயல் என கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments