அம்பானி வீட்டு திருமணம்: ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் வழங்கிய ஐடி நிறுவனங்கள்!

Mahendran
வெள்ளி, 12 ஜூலை 2024 (12:42 IST)
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்ச்சிகள் இன்று முதல் தொடங்க இருப்பதை அடுத்து மும்பையில் உள்ள ஒரு சில ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் பணியை மாற்றிக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மும்பையில் நடைபெற உள்ளதை அடுத்து நகரத்தின் மிகப்பெரிய ஐடி பூங்காக்களில் ஒன்றான பாண்ட்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஜூலை 15ஆம் தேதி வரை வொர்க் ப்ரம் ஹோம் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். 
 
அம்பானி வீடு திருமணத்தில் பங்கேற்க இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தொழிலதிபர்கள் பிரபலங்கள் வருகை தர உள்ளதை எடுத்து போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனை  கருத்தில் கொண்டே ஐடி நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
 இந்த நிலையில் ஒரு தனியார் வீட்டு திருமணத்திற்காக ஒரு நகரத்தின் போக்குவரத்தையே மாற்றுவதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்