Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருக்கலைப்பின் போது பெண் மரணம் - சித்த மருத்துவர் மாயம் !

கருக்கலைப்பின் போது பெண் மரணம் -  சித்த மருத்துவர் மாயம் !
, செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (15:23 IST)
கோவையைச் சேர்ந்த வனிதாமணி என்ற பெண் சித்தமருத்துவர் மூலம் நடைபெற்ற கருக்கலைப்பின் போது உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த மொட்டுவாவி எனும் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜின் மனைவி வனிதாமணி. இந்த தம்பதிகளுக்கு ஏறகனவே 4 குழந்தைகள் உள்ள நிலையில் வனிதாமணி மீண்டும் கர்பமானார். எனவே குழந்தை வேண்டாமென முடிவு செய்து கருவைக் கலைக்க முயன்றுள்ளார்.

அதனையடுத்து வடசித்தூர் எனும் ஊரில் உள்ள ஹோமியோபதி மருத்துவர் முத்துலட்சுமி என்பவரை நாடியுள்ளார். அதனையடுத்து முத்துலட்சுமி தனது மகனோடு வந்து வனிதாமணிக்குக் கருக்கலைப்பு ஊசி போட்டுள்ளார். அதன் பின்னர் வனிதாமணியின் உடல்நிலை மோசமாகியுள்ளது. அவரை அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் பாதி வழியிலேயே வனிதாமணி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து சித்தமருத்துவர் முத்துலெட்சுமி மற்றும் அவரது மகன் ஆகியோர் மாயமாகியுள்ளனர். அவர்களைப் போலிஸார் தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்களிடம் பணம் மோசடி செய்த நபருக்கு சரமாரி அடி உதை