பாம்பு கொத்துனா, பாம்போட வருவியோ? மருத்துவமனையில் மிட்நைட் கலாட்டா!!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2019 (14:42 IST)
விருதாச்சலத்தில் நள்ளிரவில் முதியவர் ஒருவர் தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சென்றதால் அங்கிருந்த மக்கள் தெறித்து ஓடினர்.
 
விருதாச்சலத்தை அடுத்த சின்னகண்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் ரங்கநாதன். 87 வயதான இவர் நேற்று இரவு தனது வயலில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பாம்பு இவரை கடித்து விட்டது. டென்ஷனாகாத இவர் உடனடியாக அந்த பாம்பை ஒரு பையில் போட்டுக்கொண்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
 
அங்கு சென்று தன் பையிலிருந்த பாம்பை வெளியே எடுத்தார். பாம்பை பார்த்த ஊழியர்கள் அங்கிருந்து தெறித்து ஓடினார்கள். பின்னர் தம்மை பாம்பு கடித்துவிட்டதாகவும், அதனால் தான் பாம்பை எடுத்து வந்ததாகவும் கூறினார்.
 
இதையடுத்து மருத்துவர்கள் அந்த பாம்பு எந்த வகையை சேர்ந்தது என அறிந்து,  அந்த முதியவருக்கு சிகிச்சை கொடுத்தனர். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள தெரிவித்துள்ளனர். மேலும் முதியவர் எடுத்து வந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது. இதனால் சற்று நேரம் மருத்துவமனையே களோபரமாகிவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments