Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிலம்பம் கற்றுக்கொள்ள மதுரை வந்த அமெரிக்க தம்பதிகள்! - வியக்க வைக்கும் தமிழர் வீர விளையாட்டு!

Silambam
, புதன், 3 ஜனவரி 2024 (11:07 IST)
அமெரிக்கா நியூ யார்க்கில் தற்போது விடுமுறை என்பதால்  குடும்பத்தாருடன் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை பற்றி தெரிந்து கொள்வதற்காக மதுரை வந்துள்ள அமெரிக்க தம்பதிகள்.


 
மதுரை ஆழ்வார்புரத்தைச் சார்ந்தவர் சிலம்ப ஆசான் முத்துமாரி. இவர் இண்டர்நேஷனல் மாடர்ன் மார்ஷியல் ஆர்ட்ஸ் என்ற பெயரில் இலவச சிலம்ப பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறார்.

இவரிடம் பயிற்ச்சி பெற்று  தேர்வான   மாணவர்களுக்கு மதுரையில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் மூலம் சிறந்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கி வருகின்றார்.

தற்போது ரேஸ்கோர்ஸ் மைதானத்திலும் தல்லாகுளம் மாநகராட்சி ஈகோ பார்க்கிலும் சிலம்ப பயிற்சி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இவர்களிடம் அமெரிக்காவை சேர்ந்த இந்தியர் கணினி வல்லுனர் ஹபீப் சலீம் என்பவர் அவரது மனைவி கிம் மற்றும் தாய் தந்தையுடன் முத்துமாரியிடம் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

 
அமெரிக்கா நியூ யார்க்கில் தற்போது விடுமுறை என்பதால்  குடும்பத்தாருடன் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை பற்றி தெரிந்து கொள்வதற்காக மதுரை வந்துள்ளதாகவும், அமெரிக்காவில் டபிள்யூ ,டபிள்யூ மற்றும் பாக்சிங் விளையாட்டுகள் அதிகம் உள்ளது. ஆனால் இதே போல் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் பற்றி தெரிந்து கொள்வது கடினம்.

இங்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த விளையாட்டை விளையாடியதை பார்த்ததும் கற்றுக்கொள்ள ஆசையாகாவும், ஆர்வமாக இருந்தது அதனால் நானும் கடந்த நான்கு நாட்களாக இந்த சிலம்ப விளையாட்டு பயிற்சியில் மதுரையின் சிலம்ப ஆசான் முத்துமாரியிடம்  குடும்பத்துடன் கற்றுக்கொண்டுப்பதாக  தெரிவித்தார்.

webdunia

 
சிலம்ப ஆசான் முத்துமாரியிடம் இதை பற்றி கேட்டபோது ”முதலில் தமிழக அரசுக்கு தான் நன்றி கூற வேண்டும். ஏனென்றால் இந்த சிலம்ப விளையாட்டின் மூலம் சான்றிதழ் பெறுவோருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கி வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

பல்வேறு மாவட்டங்களில் உள்ள சிலம்பம் பயிற்சி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும்மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலமாக சிலம்ப விளையாட்டுப் போட்டிகள் நடத்தி இதில் வெற்றி பெறு பவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் கரங்களால்  பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி வழங்கப்படுகிறது.

மேலும் சிலம்பம் கற்று தேர்ந்தவர்களுக்கு  பண்பாட்டு கலைச் செம்மல் விருது மற்றும் கலைச்சுடர் விருது ஆகியவை  வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!