ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்பட்ட ஏமி ஜாக்சன் 2.0 ரிலீஸாக இருப்பதால் அமைதி?
ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்பட்ட ஏமி ஜாக்சன் 2.0 ரிலீஸாக இருப்பதால் அமைதி?
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்களும் தடையை மீறு ஜல்லிக்கட்டும் ஆங்காங்கே நடந்து வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக தடை காரணமாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக உள்ள பீட்டா அமைப்புக்கு எதிராகவும் இளைஞர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் நடிகை த்ரிஷா கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்த நடிகை ஏமி ஜாக்சன் இந்த முறை தப்பித்துவிட்டார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டபோது ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும், பீட்டாவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தார் ஏமி ஜாக்சன். பீட்டாவுக்கு ஆதரவாக ஜல்லிக்கட்டை தடைசெய்ய கையெழுத்து பிரச்சாரத்தை மேற்கொண்டார் ஏமி ஜாக்சன். நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரையும் ஜல்லிக்கட்டை தடை செய்ய பீட்டாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுகோள் விடுத்தார் ஏமி ஜாக்சன்.
2015-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக கையெழுத்து பிரச்சாரம் செய்த ஏமி ஜாக்சன் இந்தமுறை எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்கிறார். ரஜினி நடிப்பில் உருவாகி விரைவில் வெளியாக இருக்கும் 2.0 படத்தில் ஏமி ஜாக்சன் நடித்திருக்கிறார். இந்த படம் வெளியாக இருப்பதால் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதாக பேசப்படுகிறது.