அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்: அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (18:57 IST)
கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி ஒரு சில விஐபிகளையும் பலியாக்கி உள்ளது என்பது தெரிந்ததே. அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமமுக பொருளாளர் வெற்றிவேல் அவர்கள் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்
 
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வெற்றிவேல் அவர்கள் சற்று முன் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தினகரனின் அமமுக கட்சியை வழி நடத்துவதில் பெரும் பங்கு வகித்த வெற்றிவேல் அவர்கள் சென்னை ஆர்கே நகர், பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் எம்எல்ஏவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது 
மேலும் சென்னை ஆர்கே நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவதற்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர் வெற்றிவேல் என்பதும், சசிகலா தினகரன் தீவிர ஆதரவாளராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் செயல்பட்டு வந்தவர் வெற்றிவேல் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெற்றிவேல் அவர்களின் மரணத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments