Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமமுக பொருளாளர் திடீர் விலகல்: எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்!

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (10:24 IST)
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கட்சியிலிருந்து  விலகி பலர்  அதிமுகவில் இணைந்து வரும் நிலையில் தற்போது அக்கட்சியின் பொருளாளர் மனோகர் என்பவரும் விலகி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திமுகவில் இருந்து பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை கலந்த சில ஆண்டுகளாக டிடிவி தினகரன் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் மா.சேகர் என்ற பேரூராட்சி தலைவர் அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்தார். அவருடன் மேலும் சில அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின் படி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் மற்றும் திருச்சி மாவட்ட செயலாளர் ஆர் மனோகரன் கட்சியில் இருந்து விலகியதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் இன்று எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 
 
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூடாரம் காலி ஆகி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments