Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுகவை தொடர்ந்து அமமுக... திமுகவுக்கு நெருக்கடி?

Advertiesment
அதிமுகவை தொடர்ந்து அமமுக... திமுகவுக்கு நெருக்கடி?
, செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (17:09 IST)
தமிழக அரசு சமீபத்தில் சொத்து வரிகளை உயர்த்தியதை எதிர்த்து அமமுகவும் கண்டன கூட்டங்கள் நடத்தவிருக்கிறுக்கிறது. 

 
தமிழக அரசு சமீபத்தில் சொத்து வரிகளை உயர்த்தியது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் இன்று அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அமமுகவும் கண்டன கூட்டங்கள் நடத்தவிருக்கிறுக்கிறது. இது குறித்து அமமுக  தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு பின்வருமாறு...  
 
வீடுகளுக்கான சொத்து வரியை 100 சதவீதம் வரையிலும், வணிக இடங்களுக்கான சொத்து வரியை 150 சதவீதம் வரையிலும் கொஞ்சமும் மனசாட்சியின்றி உயர்த்தியிருக்கிறார்கள். இதனைக் கண்டித்தும், சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பபெற வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் கழகத்தின் சார்பில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தெருமுனை கண்டன கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. வருகிற 10-ந்தேதி முதல் 10 நாட்களுக்கு நடைபெறவுள்ள இக்கூட்டங்களில், விடியல் ஆட்சி தரப்போவதாக கூறி பதவிக்கு வந்த திமுகவின் உண்மை முகத்தை தமிழக மக்களிடம் தோலுரித்து காட்டுவோம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உக்ரைனுக்கு மத்திய அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்: தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி