Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தினகரனை வாரி விட்ட புகழேந்தியின் நிலைபாடு என்ன? முக்கிய புள்ளியின் ஆருடம்!

Advertiesment
தினகரனை வாரி விட்ட புகழேந்தியின் நிலைபாடு என்ன? முக்கிய புள்ளியின் ஆருடம்!
, திங்கள், 9 செப்டம்பர் 2019 (13:49 IST)
புகழேந்தி பேசுவதை வைத்து பார்த்தால் அவர் வேறுகட்சிக்கு செல்வதைப் போல் தெரிகிறது என அமமுக முக்கிய புள்ளி வெற்றிவேல் தெரிவித்துள்ளார். 
 
அதிமுகவிற்கு போட்டியாக பார்க்கப்பட்ட டிடிவி தினகரன் சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் தனது செல்வாக்கை கோட்டைவிட்டார். தேர்தல் சரிவிற்கு பின்னர் தங்கத் தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா ஆகியோர் கட்சி தாவினர்.  
 
இந்நிலையில் புகழேந்தியும் விரைவில் கட்சி தாவவிருப்பதாக கூறப்படுகிறது. ஆம், புகழேந்தி கட்சி தாவுவது குறித்து பேசிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 
webdunia
ஆனால், புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ஆறுதல் தெரிவித்த என்னை நாகரீகமற்ற முறையில் அமமுக ஐடி விங் படம் பிடித்து வெளியிட்டு அவமானப்படுத்தியுள்ளது எனவும், இதற்கு தலைமை பதில் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 
webdunia
இந்நிலையில், புகழேந்தி குறித்து அமமுக முக்கிய புள்ளி வெற்றிவேல் பேட்டி அளித்துள்ளார். வெற்றி வேல் கூறியதாவது, தினகரனை அடையாளப்படுத்தியதாக புகழேந்தி கூறுவது சரியல்ல. அதேபோல், இந்த வீடியோவை அமமுக ஐடி பிரிவுதான் வெளியிட்டதாக கூறுவதும் தவறு. 
 
புகழேந்தி, டிடிவி தினகரனை இப்படி அவதூறாக பேசுவது சரியில்லை. அவர் பேசுவதை பார்த்தால் வேறு கட்சிக்கு போவது போலதான் தெரிகிறது என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவல் நிலையத்துக்கு நைட்டி அணிந்து வரக்கூடாது!? - திருப்பூர் போலீஸ் வினோத கட்டுப்பாடு