Publish Date: Fri, 05 Mar 2021 (08:37 IST)
Updated Date: Fri, 05 Mar 2021 (08:40 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றன
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் மூன்றாவது அணியும் அமைக்கப்பட்டு அந்த அணியிலும் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தனி அணியாக போட்டியிட்ட திட்டமிடப்பட்டிருக்கும் டிடிவி தினகரனின் அமமுக தற்போது விருப்ப மனுக்களை பெற்று வருகிறது
மார்ச் 7ஆம் தேதிக்குள் வேட்பு மனு அளிக்க வேண்டுமென ஏற்கனவே டிடிவி தினகரன் அறிக்கை விட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமமுகவில் மார்ச் 8 மற்றும் 9 ஆகிய 2 தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் நேர்காணலை நடத்துவார் என்று தெரிகிறது