சசிகலாவை சந்தித்து ஆசி வாங்கிய இரு அமமுக வேட்பாளர்கள்!

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (15:31 IST)
அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள சசிகலா இரண்டு அமமுக வேட்பாளர்களுக்கு ஆசி வழங்கியுள்ளார்.

மார்ச் 3 ஆம் தேதி இரவு அமமுகவின் பொதுச்செயலாளரும் ஜெயலலிதாவின் உற்ற தோழியுமான சசிகலா அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவரை நம்பியுள்ள அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அமமுக தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது.

இந்நிலையில் இப்போது தஞ்சையில் குடும்ப நிகழ்வுக்காக சென்றுள்ள சசிகலாவை கும்பகோணம் அமமுக வேட்பாளர் பாலமுருகன் மற்றும் ஒரத்தநாடு அமமுக வேட்பாளர் மா.சேகர் ஆகியோர் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். சசிகலா அவர்களிடம் மகிழ்ச்சியாக பேசி வாழ்த்துகளை தெரிவித்தாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக.. பிரச்சார பேருந்துக்கு பூஜை..!

நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!

கேரளப் பள்ளிகளில் 1,157 கட்டிடங்கள் ‘பயன்பாட்டிற்கு உகந்ததல்ல’: ஜூம்பா நடனமும் எதிர்ப்பும்

அடுத்த கட்டுரையில்
Show comments