Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாஜக கூட்டணியில் அமமுக-ஓபிஎஸ்-க்கு எத்தனை தொகுதிகள்? விடிய விடிய பேச்சுவார்த்தை..!

ttv dinakaran-pannersalvam

Siva

, புதன், 13 மார்ச் 2024 (07:02 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஓபிஎஸ் அணி ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்துள்ள நிலையில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்த பேச்சுவார்த்தை நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் விடிய விடிய நடைபெற்றதாக கூறப்படுகிறது.

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இந்த பேச்சு வார்த்தையின் பயனாக பாஜக கூட்டணியில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 4 தொகுதிகள் ஓபிஎஸ் தரப்பிற்கு 4 தொகுதிகள் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாகவும் இது குறித்த முறையான அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே பாரிவேந்தர், ஜான்பாண்டியன், ஆகியோர்களின் கட்சிகள் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் தற்போது அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியும் இணைந்துள்ளது

மேலும் பாமக மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகளும் பாஜக கூட்டணியில் இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் இந்த இரு கட்சிகளுக்கும் தலா 6 தொகுதிகள் ஒதுக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் பாடம்: சிறுபான்மை மாணவர்களுக்கு விலக்கு