Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டல் அடிக்கும் அம்மா உணவக சேல்ஸ்... நடவடிக்கை எடுக்குமா அரசு?

Advertiesment
டல் அடிக்கும் அம்மா உணவக சேல்ஸ்... நடவடிக்கை எடுக்குமா அரசு?
, செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (11:57 IST)
கொரோனாவுக்கு பிறகு அம்மா உணவகங்களில் கூட்டம் குறைந்தது விற்பனையும் சரிந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

 
ஊரடங்கு காரணமாக வேலையின்றி வருமானமின்றி இருக்கும் மக்களுக்கு தற்போது கை கொடுப்பது அம்மா உணவகம் மட்டுமே. அதில் குறைந்த விலையில் உணவுகள் கிடைத்து வரும் நிலையில் சமீபத்தில் இலவசமாக கோவையில் உணவுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனாவுக்கு பிறகு அம்மா உணவகங்களில் கூட்டம் குறைந்ததுள்ளது. விற்பனையும் சரிந்துள்ளது.  கொரோனாவுக்கு முன்பு வரை தினமும் 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் சாப்பிட்டனர். தற்போது ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் சாப்பிடுகிறார்கள்.
 
சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. 200 வார்டுகளில் 400 அம்மா உணவகங்களும், அரசு ஆஸ்பத்திரிகளில் 7 இடங்களிலும் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
விற்பனை வரும் காலங்களில் அதிகரிக்கும் என்று எதிப்பார்க்கப்படுவதாகவும் அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்கான திட்டம் விரைவில் செயல்படுத்த உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செப்டம்பர் 21 வரை நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர்! – முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!