Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை தமிழகம் வருகிறார் அமைச்சர் அமித்ஷா.. முழு பயண விவரங்கள்..!

Webdunia
வியாழன், 27 ஜூலை 2023 (08:05 IST)
மத்திய உள்துறை அமைச்சர் நாளை தமிழகம் வர இருப்பதாகவும் அவர் அண்ணாமலையின் நடை பயணத்தை தொடங்கி வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
பாஜக தலைவர் அண்ணாமலை நாளை மறுநாள் ராமேஸ்வரம் கோயிலில் இருந்து நடை பயணத்தை தொடங்குகிறார். இந்த நடைபயணத்தை தொடங்கி வைப்பதற்காக நாளை டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரும் அமித்ஷா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார். 
 
இதனை அடுத்து மாலை 5:45 மணிக்கு ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.  இதன் பின்னர் அண்ணாமலையின் நடை பயணத்தை தொடங்கி வைக்கும் அமித்ஷா  ராமேஸ்வரத்தில் அன்று இரவு தங்குகிறார். 
 
மறுநாள் சனிக்கிழமை அதிகாலை 5 40 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதபுர சுவாமி கோயிலில் அவர் தரிசனம் செய்கிறார். இதனை அடுத்து கட்சியின் நிர்வாகி ஒருவர் வீட்டுக்கு செல்லும் அமித்ஷா, அப்துல் கலாம் புத்தகம் ஒன்றையும் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து விவேகானந்தர் இல்லத்தை பார்வையிடும் அமைச்சர் அமித்ஷா அதன் பிறகு ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்று அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெரினாவில் இன்று விமானப்படை சாகச நிகழ்ச்சி.. எத்தனை மணிக்கு?

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

அடுத்த கட்டுரையில்
Show comments