Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழில் பேச முடியாத நிலையில் இருப்பதற்கு மிகவும் வருந்துகிறேன்: அமித்ஷா

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (19:33 IST)
தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆசை ஆனால் என்னால் முடியவில்லை என வருத்தத்துடன் இன்று பிரதமர் மோடி அவர்கள் மான் கி பாத் உரையில் கூறினார். அதையே கிட்டத்தட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று தமிழகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமிர்ஷா பேசியபோது தமிழில் பேச முடியாத நிலையில் இருப்பதற்கு மிகவும் வருந்துகிறேன் என்றும், திருவள்ளுவரைப் பற்றி அறிந்து கொள்ளவும் தமிழில் பேசவும் எனக்கு விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார்
 
தமிழ் மண்ணில் பிறந்த பல மகான்கள் உலக அளவில் பெருமை சேர்த்தவர்கள் என்றும் அமிர்ஷா இன்று தெரிவித்துள்ளார். மேலும் 2 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய மீன்வளத்துறை உருவாக்கப்பட்டது, ராகுல்காந்தி அப்போது விடுமுறையில் இருந்தார் என்றும், மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் இல்லை என்ற ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு அமித்ஷா பதில் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காண கிடைக்காத கண்கொள்ளா காட்சி.. திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு..!

உங்களிடம் கூகுள் Pixel 6a இருக்கிறதா? உங்களுக்கு கூகுள் தருகிறது ரூ.8500.. எப்படி வாங்குவது?

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments