Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி இன்னும் கட்சியே ஆரம்பிக்கல, எப்படி கூட்டணி? அமித்ஷா

Webdunia
ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (12:16 IST)
ரஜினிகாந்த் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை அவருடன் எப்படி கூட்டணி? என்று அமித்ஷா பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி ரஜினிகாந்த் பாஜகவுடன் கூட்டணி வைப்பார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் தனித்தே போட்டியிடுவார் என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர். மேலும் ஒரு சிலர் அவர் கட்சியே ஆரம்பிக்க மாட்டார் என்றும் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரஜினிகாந்த் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை என்றும், அவருடன் கூட்டணி குறித்து பேசுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் 
 
மேலும் தற்போதைய நிலையில் அதிமுகவுடன் நாங்கள் இணக்கமாக இருக்கின்றோம் என்றும் அவர்களுடன் தான் கூட்டணி என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே ரஜினி கட்சி ஆரம்பித்த பின்னர்தான் அவருடன் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என அமித்ஷா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான நிலையத்திற்கு மாற்று இடம் எது என்பதை விஜய் தான் கூற வேண்டும்: அண்ணாமலை

பொங்கல் விடுமுறை எதிரொலி: மாதாந்திர பயண அட்டை பெற கால அவகாசம் நீட்டிப்பு..!

அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணி.. காப்பி பேஸ்ட் அறிக்கைகள் குறித்து அமைச்சர் சிவசங்கர்..!

சீமான் ஈழம் சென்றது உண்மைதான், ஆனால் அவர் எடுத்த புகைப்படம்.. கொளத்தூர் மணி

தமிழ் படிக்கும் வட மாநிலத்தவர்களின் குழந்தைகள்.. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments