Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வந்தார் அமித்ஷா: பாஜக நிர்வாகிகளிடம் முக்கிய ஆலோசனை

Webdunia
ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (09:13 IST)
துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள பாஜக தேசிய தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா சற்றுமுன் சென்னை வந்தடைந்தர்.
 
சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கவர்னர் மாளிகையில் தங்கியுள்ளார். அவரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
 
இதனையடுத்து இன்னும் சற்று நேரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக-வின் உயர்நிலை குழு கூட்டம் கூடுகிறது. அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பாஜக மேலிட பார்வையாளர் முரளிதர ராவ், தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த அமித்ஷா அதிரடி வியூகம் அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
 
தமிழகத்தில் பாஜக எந்த காலத்திலும் காலூன்ற முடியாது என்று திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சவால்விட்டு வரும் நிலையில் அந்த சவாலை அமித்ஷாவின் வியூகம் முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐடி கார்டு வாங்கி இந்து என உறுதி செய்த பின்னரே சுட்டார்கள்.. காஷ்மீர் தாக்குதலில் அதிர்ச்சி தகவல்..!

காஷ்மீர் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 20 பேர் பலி.. மோடி-அமித்ஷா அவசர ஆலோசனை..!

LICக்கு திடீரென கிடைத்த ஜாக்பாட்.. ஒரே பங்கில் கோடிக்கணக்கில் லாபம்..!

மறைந்த போப் உடல்.. முதல்முறையாக வெளியிட்ட வாடிகன் நிர்வாகம்..!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. எத்தனை ஆயிரம்? அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments