Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யிடம் ரஜினி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் - கொளுத்திப் போடும் அமீர்

Webdunia
புதன், 6 ஜூன் 2018 (13:13 IST)
யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் தூத்துக்குடி சென்று மக்களுக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஜயிடமிருந்து ரஜினிகாந்த் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

 
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற நடிகர் ரஜினி சென்ற போது ‘ஒரு நடிகனாக என்னை சந்திப்பதில் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்’ எனக்கூறி சென்றார். மேலும், அங்கு சென்ற போது உற்சாகமாக ரசிகர்களை பார்த்து சிரித்தபடி கை அசைத்தார். இவை அனைத்தும் விமர்சனங்களுக்கு ஆளாகின. அதேபோல், ஆறுதல் கூறிவிட்டு அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
 
நடிகர் விஜய் நேற்று நள்ளிரவு தூத்துக்குடிக்கு சென்ற விஜய், விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரின் பைக்கில் பின்னால் உட்கார்ந்து பலியானவர்களின் குடும்பத்தினர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார். காலதாமதமாக வந்ததற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். மேலும் அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவியும் செய்தார். புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என கோரிக்கையும் வைத்தார். ஆனாலும், சில புகைப்படங்கள் வெளியாகி விட்டன.

 
இந்நிலையில், நடிகரும், இயக்குனருமான அமீர் செய்தியாளர்களிடம் பேசும் போது “தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்யிடமிருந்து ரஜினி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments