Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரியம்மன் ஆலய வைகாசி பெருந்திருவிழாவினை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம்

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (22:42 IST)
கரூர் மாரியம்மன் ஆலய வைகாசி பெருந்திருவிழாவினை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் – முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சின்னசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
 
தமிழக அளவில் உள்ள மாரியம்மன் ஆலயங்களில் மிகவும் விமர்சையானதும், புகழ்பெற்றதுமான கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய வைகாசி பெருந்திருவிழா நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், ஆலயத்தின் அருகே உள்ள வாசவி மண்டபத்தின் முன்பு கரூர் வாசவி அன்னதான கமிட்டி சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடக்கி வைத்தார். முன்னாள் அமைச்சரும், அதிமுக கழக அமைப்பு செயலாளருமான ம.சின்னசாமி கலந்து கொண்டு சிறப்பித்தனர். கரூர் வாசவி அன்னதான கமிட்டி நிறுவனர் உமேஷ்குமார் தலைமை வகித்தார். கரூர் அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்தில் உள்ள அம்மனை தரிசித்த முன்னாள் அமைச்சர்கள், பின்பு கரூர் மாரியம்மன் ஆலயத்திலும் பக்தர்களோடு பக்தர்களாக சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments