அதிமுகவுடன் கூட்டணிக்கு அவசியம் இல்லை! அழைப்பை மறுத்த திருமாவளவன்!

Prasanth Karthick
ஞாயிறு, 17 நவம்பர் 2024 (14:10 IST)

அதிமுக கூட்டணியில் இணைய விடுக்கப்பட்ட மறைமுக அழைப்பை விசிக தலைவர் திருமாவளவன் நிராகரித்து பேசியுள்ளார்.

 

 

விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுகவுடன் தொடர்ந்து கூட்டணியில் இருந்து வரும் நிலையில், சமீபத்தில் அதன் தலைவர் திருமாவளவன் “கூட்டணியிலும் ஆட்சியிலும் பங்கு” என்னும் கருத்து குறித்து பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதை தொடர்ந்து சில கட்சிகள், கூட்டணியிலும் பங்கு, ஆட்சியிலும் பங்கு என்னும் கருத்தை வைத்து விசிகவுக்கு தொடர்ந்து மறைமுகமாக வலை வீசி வருகின்றன.

 

இந்நிலையில் சமீபத்தில் அதிமுக நிர்வாகி இன்பதுரை, “திருமாவளவன் நம்மோடுதான் இருப்பார்” என அவரை அதிமுக கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பேசியிருந்தார். திமுகவுடன் விசிகவுக்கு மனஸ்தாபம் உள்ளதாகவும், அதனால் விசிக வேறு கூட்டணியில் இணைய உள்ளதாகவும் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில் அதுகுறித்து தற்போது திருமாவளவன் உறுதியான விளக்கத்தை அளித்துள்ளார்.

 

அதில் அவர் “விடுதலை சிறுத்தைகள் கட்சி வேறு கூட்டணிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்தியா கூட்டணியில் தற்போது இருப்பதால் வேறு கூட்டணியை தாங்கள் உருவாக்க தேவையும் இல்லை” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments