Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக குற்றச்சாட்டு!

பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக குற்றச்சாட்டு!
, புதன், 18 அக்டோபர் 2023 (12:37 IST)
மதுரை கீழக்குயில் குடி பகுதியில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவியர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்பட்டு வருவதால் மாணவிகள் உடல் உபாதைகளுக்கு உண்டு ஆளாவதாக குற்றச்சாட்டு.

கடந்த ஒரு வாரமாக மாணவருக்கு காலை உணவாக வழங்கப்படும் இட்லி, பொங்கல் உள்ளிட்ட உணவுகளுக்கு வழங்கப்படும் சாம்பாரில் புழுக்கள் இருப்பதால் மாணவிகள் காலை உணவு சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மாணவியர் விடுதி காப்பாளரிடம் மாணவிகள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்களுடன் தரமற்ற உணவு வழங்கி வருவதால் மாணவிகள் காலை உணவை தவிர்க்கும் நிலையில் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழக அரசு காலை மற்றும் மதிய உணவு திட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கி வரும் நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் மாணவிகள் பணம் செலுத்தி உணவு உண்ணும் நிலையில் தரமற்ற உணவை வழங்கி மாணவிகளின் கல்வியை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக 'சைத்தான்' கூட்டணி.. வெளியேறியதில்1000 மடங்கு மகிழ்ச்சி: திண்டுக்கல் சீனிவாசன்