Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களுக்குத் தடை: எந்த மாவட்டத்தில் தெரியுமா?

Advertiesment
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களுக்குத் தடை: எந்த மாவட்டத்தில் தெரியுமா?
, செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (21:20 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததை அடுத்து பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன என்பதை பார்த்தோம். இந்த நிலையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக மீண்டும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
குறிப்பாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் முக்கிய வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பதாகும். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு தடை என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மூன்றாம் அலை ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை பரவலாம் என்று விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் கூறி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது/  ஆனால் அதே நேரத்தில் மற்ற தளர்வுகள் வழக்கம்போல் அமல்படுத்தப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு