பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்க முதல்வர் உத்தரவிட்ட நிலையில், மாணவர்கள் எத்தனை மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் தேர்ச்சி அளிக்க தேர்வுத்துறை ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவருக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பல பள்ளிகளிடம் விடைத்தாள்கள் இல்லையென்றும், பல மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் தேர்ச்சி அடையவில்லை என்றும், மேலும் பலர் தேர்வுக்கே வரவில்லை என்றும் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. இந்த மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் அளிப்பது என ஆசிரியர்கள் குழம்பியுள்ளனர். இந்நிலையில் புதிய் ஆணை பிறப்பித்துள்ள அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத்துறை ஆணையர் பழனிசாமி காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் தேர்ச்சி வழங்க உத்தரவிட்டுள்ளார்.