Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன: ஊழியர்கள் வருகை!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (08:18 IST)
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் முதல் கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இதனை அடுத்து சற்று முன்னர் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்க பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. முதல்கட்டமாக பள்ளியில் பள்ளியில் பணிபுரியும் ஊழியர்கள் வருகை தந்து கொண்டிருப்பதாகவும் இன்னும் ஒரு சில நிமிடங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகை தர இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் உள்ள 13 ஆயிரத்து 605 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வாரத்தில் ஆறு நாட்கள் செயல்படும் என்றும் 9:30 முதல் பிற்பகல் மூன்று முப்பது மணி வரை வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்படுவதை அடுத்து மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல மகிழ்ச்சியுடன் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

விழுப்புரத்தில் 30 மணி நேரம் தொடர் மழை.. புதுவையில் வரலாறு காணாத மழை..!

சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. ஆனால் இல்லத்தரசிகள் நிம்மதி..!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

அடுத்த கட்டுரையில்
Show comments