Publish Date: Thu, 28 Apr 2022 (14:05 IST)
Updated Date: Thu, 28 Apr 2022 (14:07 IST)
புதுவையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டும் அனைத்து மாணவர்களுக்கும் ஆல்பாஸ் என்று சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தேர்வு நடத்தாமல் ஆல்பாஸ் போடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது
அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடைபெற்றாலும் அனைவரையும் ஆல்பாஸ் செய்ய வேண்டுமென புதுவை மாநில பள்ளிக் கல்வித்துறை தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது
எனவே இந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்ட போதிலும் ஆல்பாஸ் என்ற அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது