Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை அனைத்துக் கட்சி கூட்டம் - என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (11:17 IST)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது என அறிவிப்பு. 

 
நீட் தேர்வு விலக்கு வேண்டும் என கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து அதனை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்ப வேண்டும். ஆனால் சில மாதங்களாக நீட் தேர்வு மசோதா ஆளுநர் மாளிகையிலேயே கிடப்பில் இருந்தது. 
 
இந்நிலையில் தற்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரிய தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதனிடையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.  நாளை நடைபெற உள்ள உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பிறகு ஆளுநர் மற்றும் குடியரசுத்தலைவரை சந்திப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments